சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 
பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்கவைப்பதற்காக, 81 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மஹவௌ பகுதியில் 15 முகாம்களும், தங்கொட்டுவ பகுதியில் 1 முகாமும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் 9 முகாம்களும், நாத்தாண்டிய பகுதியில் 39 முகாம்களும், சிலாபத்தில் 11 முகாம்களும், வென்னப்புவ பகுதியில் 5 முகாம்களும், கற்பிட்டி பிரதேசத்தில் 01 முகாமும் அமைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. Read more
		    
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார். 
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பொதி சோதனையாளர்களின் பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநீசன் ஆவார். 
தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேர் 2 வருட ஆசிரியர் பயிற்சியை நினைவு செய்து இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் இணைந்து கொள்கின்றனர். 
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களை சேர்ந்த 105,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 
இலங்கை எதிர்கொண்டுள்ள இயற்கை அனர்த்தத்துக்கு தயாராவதற்கும், உடனடியாக செயற்படுவதற்குமாக அவுஸ்ரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன இணைந்து 89 மில்லியன் ரூபா நிதியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. 
பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். 
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே மாதம் 24, 25, 26, 27 மற்றும் ஜூன் மாதம் 02 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை அடையாளம் காட்டும் கருவி, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டா 5 என்பன படையினரால் மீட்கப்பட்டுள்ளன.