Header image alt text

மன்னார் நகர் மத்தியசுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

மன்னார் மத்திய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அரச பேருந்து சேவை நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயே மேற்படி சேதமாகி காணப்படுகின்றது. பிரதான பாதைகளை ஒன்றினைத்து அதன் ஓரத்தில் தொடுக்கப்பட்டுள்ள குறித்த கால்வாயின் மேல் பகுதியில் உள்ள கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்ட மூடியானது Read more

புகையிரத தொழிற்சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

அதேவேளை புகையிரத தொழிற்சங்கம் மற்றும் புகையிரத அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அந்த சங்கம் கூறியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் இன்று 12.30 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபுலானந்த கல்லூரியின் கணினி அறையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

அதனையடுத்து பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிக்குளம் பொலிஸார் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். Read more

சித்திரவதைகள் தடுப்புக்கான ஐ.நா சபையின் உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் நேற்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.

சித்திரவதைகள் தடுப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழுவின் இலங்கை விஜயம் ஏப்ரல் முற்பகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதும், பயண விபரம் காலஎல்லை குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், குறித்த விஜயத்தின் கால எல்லை உட்பட ஏனைய விபரங்கள் பயணத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more

கடந்த 2017ஆம் ஆண்டு சிவனொளிபாத மலை அடிவாரத்தில் குறிப்பிட்ட சிலரால் சிவனொலிபாத மலையின் பெயர் மாற்றம் செய்யபட்டது.

அது அவ்வாறு இருக்கவே மஸ்கெலியா பிரதேசசபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒட்டு மொத்தமாக சபை ஒன்று கூடலின்போது ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டு சபை அங்கீகாரத்துடன் கடந்த காலங்களில் இருந்ததை போல் சிங்கள மொழியில் ‘சிரிபாதய’ என்றும், தமிழ் மொழியில் ‘சிவனொளிபாதமலை’ என்றும் ஆங்கில மொழியில் ‘சிரிபாதய’ என்றும் பெயர்களை உள்ளடக்கியதாக பெயர் பலகை ஒன்று கட்டப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக முழுமையாக பெண் பணியாளர்களைக் கொண்ட விமானம் ஒன்று நேற்றையதினம் சிங்கபூருக்கு சென்றுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரீலங்கன் எயார்லைனுக்கு சொந்தமான UL306 என்ற விமானமே சிங்கபூரில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் நேற்று அதிகாலை 01.00 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதுடன், பிரதான விமானி, துணை விமானி உட்பட அனைத்து பணியாளர்களும் பெண்களாக இருந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சம்பவ நேரம் தந்தையும் மகளும் இருந்துள்ளார்கள். மகள் உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து, அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், திருக்கோவிலிலுள்ள அவர்களின் அலுவகத்துக்கு முன்பாக கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டு, எதிர்ப்பு கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவில் வாக்ரிஷா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணியின் தலைமையில், அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றைத் தொடர்ந்து அங்கு வருகை தந்து இருந்த பெண்கள், கறுப்பு கொடிகளைப் பறக்க விட்டு அரசுக்கு எதிரான தமது கோசங்களை எழுப்பி, எதிர்ப்பைத் தெரிவித்தனர். Read more

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மார்ச் 29ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சத்ய கவேஷகயோ என்ற அமைப்பினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிசிர டி ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்த போதிலும் அவர்கள் சார்பில் எவரும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. Read more

ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும் என்னால் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார். இந்திய ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த மூன்று தசாப்த காலமாக சிக்கியுள்ள சேற்றிலிருந்து அதனை மீட்பதற்கு இன ரீதியில் பக்கச்சார்பற்ற -சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட மைய நீரோட்டத்துடன் சாரத தலைவர் ஒருவரிற்காக இலங்கை ஏங்குகின்றது என தான் நம்புவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நான் வெற்றிபெறுவேன் என நம்புவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more