இலங்கையில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமின்றி சிகிரியாவை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. விசாக பூரணை, தேசிய தொல்பொருள் தினம் என்பவற்றை முன்னிட்டு இந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளதாக சிகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மக்கள் கட்டணமின்றி சிகிரியாவை பார்வையிட முடியும் என்பதுடன், சிகிரியாவில் அகழ்வு பணிகளின்போது கிடைத்த தொல்பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்துக்கும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களுக்கும் இன்று இரவு 7 மணியிலிருந்து பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் சீன பிரதமர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றுபிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற எதிர்பாராத பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தனது அனுதாபங்களை தெரிவித்த சீன பிரதமர்,
வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர கூறியுள்ளார்.
குருநாகல் மாவட்டடம் குளியாப்பிட்டி பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர், உடன் அமுலுக்கு வரும் வகையில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
யாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பப்புவா நியூகினியா மற்றும் சொலமன் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
யாழ்ப்பாணம், கச்சாய் பாலாவி தெற்கில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்மப் பொதியொன்று காணப்பட்டதையடுத்து அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் காணப்பட்டது.