இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பிரிவு, வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கொச்சிக்கடை, சென். அந்தோனி தேவாலயத்திற்கு தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள வந்த நபர் கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நபரிற்கு சொந்தமான வேன் ஒன்றிலேயே வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி நேற்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.
அரச பாடசாலைகளின் கனிஷ்ட மாணவர்களுக்கான 2ம் தவணை இன்று ஆரம்பித்த போதிலும், மாணவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் அம்பாறை காரைதீவு பாடசாலைப் பிள்ளைகள் ஐவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குளியாபிட்டி – ஹெட்டிபொல – பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பிரதேசங்களுக்கும் நாளை அதிகாலை 4 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டிருக்கும் முகத்தை முழுவதுமாக மறைக்கும் விதத்திலான ஆடையை அணிந்து இறுதிச் சடங்கில் பங்குபற்றியிருந்த தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.