Header image alt text

கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று 16 தாய்மார் முறைபாடு செய்ததாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குருநாகல், வாரியபொல, கலேவல, தம்புளை, மாவத்தகம, மெல்சிறிபுர ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே முறைபாடு செய்துள்ளனர். இதேவேளை நேற்று வாரியபொல, குருநாகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு தாய்மார் குறித்த வைத்தியருக்கு எதிராக முறைபாடு செய்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி புர்கா அணிந்திருந்தமையின் காரணமாக, நோயாளரொருவர் அவரிடம் மருத்துவம் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். Read more

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, எதிர்வரும் 30ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இந்த விழாவுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்து தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் தலைவர்களின் வரிசையில் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். Read more

இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் சடலத்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். Read more

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள், பிரித்தானியா மற்றும் பிரான்ஸில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு இணையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த குண்டுகள் வெளிநாட்டிலிருந்து வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பான தவ்ஹித் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹஷீம் குண்டு தயாரிக்கும் ஆற்றலை கொண்டிருக்கவில்லை. வெளிநாட்டவர்களின் உதவியுடன் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. Read more

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நாரஹேன்பிட்டியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீடொன்றிலிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் முகமூடிகள் நான்கும்,

வீட்டில் பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்ட கத்திகள் பத்தும் மற்றும் இலத்திரனியல் கருவிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் ஆறு மாவட்டங்களில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பொலிசாரினாலும் அடாத்தாக விகாரை அமைத்துள்ள பிக்குவினாலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளையார் ஆலயம் பலநூறாண்டுகளாகப் பழைய செம்மலை கிராமத்தில் காணப்படுகின்ற நிலையில் போருக்குப் பின்னர் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் குடியமர்ந்து குருகந்த ரஜமகா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றையும் அமைத்துள்ளதோடு பரியப் புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார். Read more

சிலாபம் மாதம்பே உள்ள பாடசாலையொன்றின் அலுவலகத்திலிருந்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் இலங்கைத் தலைவரும், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய மடிக்கணினியொன்றும், 135 இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பாடசாலையின் பொறுப்பாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து, சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போதே, குறித்த பாடசாலையிலிருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்’ என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்தக் குழுவுடன் தொடர்புடைய மேலும் 25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. Read more

கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர்.

கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர். Read more