maithripalaமாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அரச திறைசேரியில் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, ஜனாதிபதி ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் மாதங்களில் வெளிநாடுகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் மாகாண சபை உறுப்பினர்களும், அதுகுறித்து திறைசேரிக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள ரஷ்யா விஜயம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படாத நிலையில், ஜனாதிபதி இவ் அறிவித்தலை விடுத்துள்ளார். பொதுமக்களின் பணம் பாரியளவில் விரயமாகும் இவ்வாறான பயணங்கள் குறித்து தம்மிடம் அறிவிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் வெளிநாட்டு விஜயங்களுக்காக கடந்த 20 வருட காலத்தில் பாரியளவான நிதி செலவிடப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.