 முல்லலைத்தீவு மாவட்டத்தின் 18 கமக்கார அமைப்புக்களுக்கு விவசாய நடவடிக்கையை பாதிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் முள்ளியவளை கமநலசேவை நிலையத்தில் இன்று துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் குரங்குகளின் தாக்கத்தினால் விவாசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்ததுள்ளது.

இந்நிலையில் 2016ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன் வழங்கி வைத்துள்ளார்.
இதன்படி மன்னாகண்டல், ஆலங்குளம், பழைய முறிகண்டி, பாரதிநகர், சின்னச்சாளம்பன், பெரியகுளம், 5ம் கண்டம், காதலியார்சமணங்குளம், ஒதியமலை, புதன்வயல், மதவளசிங்கன்குளம், கிச்சிராபுரம், வற்றாப்பளை, முள்ளியவளை, மத்தி முள்ளியவளை, வடக்கு முள்ளியவளை, தெற்கு உண்ணாப்பிலவு, கணுக்கேணிகிழக்கு, தண்ணிமுறிப்பு ஆகிய 18 கமக்கார அமைப்புக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.