asமுன்னாள் போராளிகளில் நான்கு பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் நடத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வேலாயுதன் சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார். ஒரு வருடகால புனர்வாழ்வளிப்பின் போது, ஆறு மாதங்கள் தொழிற்பயிற்சியும், மிகுதி ஆறு மாதங்கள் சமூக உளநலம்சார் பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர். கெமிடோன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த போராளிகளை அவர்களது குடும்பத்துடன் இணைத்துவைத்துள்ளார். இதன்போது, இராணுவத்தினரதும், புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளினதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் 19பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் நிலையில், நான்குபேர் மாத்திரமே இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.