Header image alt text

மஹிந்த பிரதமராகியிருந்தால் பாரியளவில் கொலைகள்-சந்திரிகா குமாரதுங்க-

chandrikaஅண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலைசெய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளயிட்டபோதே இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ் ஆட்சியையே நடத்தியிருந்தார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு அழுத்தங்களில் இருந்து விடுபடுவதே அவர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க முற்பட்டதன் நோக்கம் எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இந்தியா மிகவும் விஷேடமானது. முதலீடு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இந்தியாவின் ஆதரவு எமக்கு தேவை. தெற்காசியாவில் இந்தியாவின் பங்கு, பூகோள ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் கேந்திர முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது, எனவும் கூறினார். மேலும் இங்கு கருத்து வெளியிட்ட சந்திரிகா,

Read more

சர்வதேச விசாரணை தேவையில்லை-பிள்ளையான்-

pillayanசர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவையில்லையென்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நாட்டில் யுத்தம் நடைபெற்றது. போரென்றால் அங்கு ஈவிரக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லையென்பதை போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கூறுகின்றேன். புலிகளும் மிகப்பெரும் குற்றங்களை செய்துள்ளனர். பெருமளவானோரை படுகொலை செய்துள்ளார்கள். எங்களுக்கு சாதகமானோரை கொன்றொழித்துள்ளார்கள். இந்நாட்டில் புலிகள் அழிந்த பின்னர்தான் ஒரு சமாதானம், நிம்மதி வரும் என நாங்களும் உறுதியாக நம்பினோம். ஆனால் அந்த யுத்தத்தின்போது தமிழ் மக்கள் கேடயமாக பயன்படுத்தப்பட்டு அழிந்தது வேதனையான விடயம். யுத்தகாலப் பகுதியில் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது நாங்கள் சரத் பொன்சேகாவிடம் பசில் ராஜபக்ஷவிடம் இந்திய உயர்ஸ்தானிகரிடம் எல்லாம் இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கூறியிருந்தோம்.

Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி சந்திப்பு-

prime ministerபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீனாவுக்கான விஜயத்தை நிறைவு செய்த தென்னாபிரிக்க ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பும் வழியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். சுமார் 2 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தென்னாபிரிக்க ஜனாதிபதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து வேட்டை-

234343434சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’ எனும் தொனிப்பொருளில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்னணியும், யாழ்.பல்கலைக்கழகத்தினரும் இணைந்து யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக நேற்றுமாலை 4மணியளவில் கையொப்பம் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்தனர். மத குருமார், கன்னியாஸ்திரிகள், பெற்றோர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும், ஊழியர் சங்கத்தினர், தமிழ் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு தமது ஆதரிவினை தெரிவித்து கையொப்பமிட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலையில் காணாமல் பேனவர்களின் நினைவு தினம்-

4கிழக்கு பல்கலைக்கழக வளாக நலன்புரி முகாமிலிருந்து கடந்த 05.9.1990 அன்று காணாமல் போன 158 தமிழ் மக்களினதும் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்றுகாலை பல்கலைகழகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மேற்படி உறவுகளை இராணுவத்தினரே கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். நாங்கள் நினைவு கூறுவோம் எனும் தலைப்பில் எளிமையான முறையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. தாம் வேண்டுவெதெல்லாம் புதை குழி அல்ல புன்னகை மனிதர்களையே என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன. அத்துடன் காணால் போனவர்களின் நினைவாக விளக்குகளும் ஏற்றப்பட்டன. இதன்போது பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர்கள் கடமைகள் பொறுப்பேற்பு-

ministriesபுதிதாக சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட அமைச்சர்கள் சிலர் நேற்றைய தினமே தங்களின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றம் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க ஆகியோர் தங்களின் பதவிப் பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். மேலும் சில அமைச்சர்கள் இன்றையதினம் தங்களின் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவு-

election.....இரண்டு உள்ளுராட்சி மன்றங்களைத் தவிர 23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபைகள் தொடர்பில் நீதிமனறத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 2 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஏற்கனவே பதவிக்காலம் நிறைவடைந்துள்ள உள்ளுராட்சி மன்றங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், அதற்கமைவாக உள்ளுராட்சி மன்றங்களின் கட்டமைப்பை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தருக்கு  வாழ்த்து -ஆனந்தசங்கரி

கௌரவ இரா. சம்பந்தன் பா.உ.,  எதிர்க் கட்சித் தலைவர்,

அன்புள்ள சாம்

ANANDASANGAREEநீங்கள் எதிர்க் கட்சி தலைவராக தெரிவானதற்கு எனது வாழ்த்துக்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெறுவதற்கும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும்  பூரண ஒத்துழைப்பை கொடுப்பீர்கள் என நம்புகின்றேன். மிக்க நட்புடனும் முற்று முழுதாக மாறுபட்ட சூழ்நிலையிலும் இப்பதவியை ஏற்றுள்ளீர்கள். பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக்க உற்சாகத்துடன் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கொடுக்கும் வரவேற்புகளைப் பார்த்து எனது மனதை மாற்றி உங்களை வாழ்த்தவும் உங்களுக்கு முழு ஆதரவு கொடுக்கவும் தீர்மானித்தேன். Read more

வவுனியா‬ புதிய சின்னக்குளம் மயான சங்கத்தினருக்கு ‪புளொட்‬ நிதியுதவி.!(படங்கள் இணைப்பு)

ssவவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல் (கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது. இவ் உதவி கழகத்தின் மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் நேற்று சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),

இக் கிராமத்தின் மீள் குடியமர்வில் 1990 காலப்பகுதியில் மறைந்த உப தலைவர் தோழர் மாணிக்கதாசனின் பங்கு அளப்பெரியது. அத்துடன் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் எமது கழகத்தின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட கந்தையா சிவநேசனுக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு நன்றி கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

இந்தியாவைப் பார்த்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டும்: இரா சம்பந்தன்

sampanthanஇலங்கையின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்திருப்பது தற்காலத்திற்கு அவசியம் என்றும், இது நாட்டிற்கு நன்மை பயக்கும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், இலங்கை அரசை ஆதரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் அனைத்து விவகாரங்களிலும் தாம் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்று சம்பந்தர் தெரிவித்தார். Read more

மலையக வரலாற்றில் திருப்புமுனை – அமைச்சர் திகாம்பரம்

malyagamஇருநூறு வருடங்களாக தோட்ட மக்கள் என்றும் பெருந்தோட்ட மக்கள் என்றும் நிர்வாக பெயர் கொண்டு அழைக்கப்பட்ட மலையக சமூகத்தின் அவலத்தை நீக்கி லயத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க புதிய கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளோம் என மலைநாட்டு புதிய கிராம, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். 
புதிய அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துகொண்ட பின்னர் தனக்கு கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவி குறித்து ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையில் அமைச்சர் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளதாவது, Read more

கல்வியால் உயர்வதே சமூக உயர்வுக்கு ஒரே வழி-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-

P1020401யாழ்ப்பாணம் மூளாய் சுவாமி ஞானப்பிரகாசர் முன்பள்ளியின் வருடாந்த விளையாடடுப் போட்டி குறித்த முன்பள்ளி மைதானத்தில்; இடம்பெற்றது. இவ் நிகழ்வில் வலிமேற்கு பிரதேசசபையின் முனனாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அங்கு அவர் உரையாற்றும்போது, கடந்தகால யுத்தங்களால் நாம் பல வேதனைகளையும் பல குறிப்பிட்டுக்கூற முடியாத இழப்புக்களையும் சந்தித்து இருக்கின்றோம் இவ் இழப்புக்களின் வடுக்கள் என்றும் மாறாதவையாகவே உள்ளது. Read more

வட்டு இந்து வாலிபர் சங்கம் வாழ்வாதார உதவி-(Photoes)

l4யாழ். நவாலி வடக்கு மானிப்பாயில் வசிக்கும் சுரேன் என்பவர் வன்னி இறுதி யுத்தத்தின்போது தனது இடது கண்ணையும் இடது கையையும் இழந்துள்ளார். இவர் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு தனது வாழ்வாதாரமான தச்சுத் தொழில் செய்வதற்கு 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்வனவு செய்து தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 30,000 ரூபா பெறுமதியான பொருட்கள் இன்று சங்க காரியாலத்தில் வைத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பொருட்களை முன்னாள் சங்க உறுப்பினர் தேவராஜன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

Read more