Header image alt text

weerகிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் 278ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more

arrest (9)ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஏ.அருள் ஜயரட்ணம் (41) என்ற பெயருடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று கைதுசெய்யப்பட்ட இவர் இராமேஸ்வரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்திற்கு மாறான முறையில் இந்தியாவிற்குள் பிரவேசித்த குற்றத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்கள் மற்றும் சிறுவர்களின் ஆடைகள் என்பனவும் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளன. Read more

highwayதெற்கு அதிவேக வீதியின் களனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக வீதியின் களனிகம தொடங்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான 26 ஆவது மைல்கல் அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதையின் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த ட்ரக் வாகனம் ஒன்றுடன் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

motor shellவெடிக்காத நிலையில் இருந்த ஷெல்லினை வெட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மணியம் தோட்டம், உதயபுரம், 3ஆம் குறுக்கு வீதி பகுதியைச் சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது 37) என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த நபர், வெடிக்காத பழைய ஷெல்களை எடுத்து அவற்றில் இருக்கும் மருந்தினை மீன்பிடிப்பவர்களுக்கு விற்பனை செய்கிறவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more