sfdfdfddddவர்த்தக ரீதியிலான விமானப் பயணங்களை ஹிமாலயா எயர்லைன்ஸ் நிறுவனம் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து நேபாளத் தலைநகரான காட்மன்டுவிற்கும் கொழும்புக்கும் இடையே ஆரம்பிக்க உள்ளது.

சீனா-நேபாளத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விமானசேவை வாரத்தில் மூன்று நாட்கள்- செவ்வாய், வியாழன், சனி நாட்களில் இடம்பெறும். 158 இருக்கைகளைக் கொண்ட ஏ320 ரக விமானங்களை இந்த நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இந்தியா, சீனாவை அடுத்து நேபாளத்திற்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் நாடாக இலங்கை இருந்து வருகின்றது.பூமியதிர்ச்சி, வர்த்தகத் தடைகள் இருந்த போதிலும் இலங்கை வரும் நேபாளியர்கள் தொகை கடந்த வருடம் கணிசமான அளவு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மையான இலங்கையர்கள் கௌதம புத்தர் பிறந்த இடமாகக் கருதப்படும் லும்பினி என்ற இடத்தையே நேபாளத்தில் அதிகமாகச் தரிசிக்க விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.