Header image alt text

dsயாழ். மாவட்ட செயலக புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.  புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கும் முகமாக யாழ் சென்றிருந்த பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி தமிழ் கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான வாத்தியங்கள் முழங்க பிரதமர் மாவட்ட செயலகத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலின்கீழ் நிர்மாணிக்கப்பட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. Read more

maithriஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளையதினம் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற சீர்திருத்த அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் ஜனாதிபதியுடன் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளனர். Read more

ANANDASANGAREEகாரணம் தெரியாமலும் குற்றம் எதுவும் புரியாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்தும் வகையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம், வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். Read more

kilinochchi-marketகிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீ காரணமாக 100ற்கும் மேற்பட்ட கடைத்தொகுதிகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் பாரிய சொத்தழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்துக் காரணமாக சந்தையின் பழக்கடைகள், புடவைக் கடைகளும் முற்றாக எரிந்து அழிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகளும் தீயில் எரிந்து நாகமாகியுள்ளன. Read more

sdfdfdfகாவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள், வணிகர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் இடம்பெறுகின்றது. காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக, பாமக, தமாகா, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. Read more

4கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய பிரதமருக்கு ஒரு மகஜரை 7 தமிழ் கட்சிகள்

(தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிடீபி, புளொட், டெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி) ஆகியன இணைந்து மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் உயர்திரு நடராஜனிடம் இன்றுமாலை 8.00மணியளவில் கையளித்துள்ளன.
Read more

1யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் ஸ்தாபகர் நினைவு விழாவும் சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் 12-09-2016 திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் சி.சிவராஜன் அவர்களின் தலைமையில் வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக எம்.காண்டீபன் ((பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக உயர்திரு. சு.சண்முககுலகுமாரன் (உதவிக் கல்விப் பணிப்பாளர், உடுவில் கோட்டம்), பழைய மாணவி திருமதி. நிரஞ்சலா குணராஜ் (கணக்காளர், உணவு, விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Read more

p1390591யாழ். பருத்தித்துறை குரும்பைகட்டி சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை திரு. சிவநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே. சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், கே.சயந்தன், கே.பரஞ்சோதி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

p1390530யாழ்ப்பாணம் சில்லாலை வடமத்தி கிராம அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடலில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். Read more

p1390483யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி மாதர் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பறாளை நாவலர் சன சமூக நிலையம் ஆகியவற்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கென கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டு 09.09.2016 வெள்ளிக்கிழமை அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் கணனி அறிவினை மேம்படுத்தும் நோக்கில் இவை வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கு கணனி வகுப்புக்கள் நடைபெறுவதற்கான ஒழுங்குகளையும் சுழிபுரம் மத்தி மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நாவலர் சனசமூக நிலையத்தினர் செய்துள்ளார்கள். Read more