Posted by plotenewseditor on 27 September 2016
Posted in செய்திகள்
1998ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், அச்சுவேலியிலிருந்த இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர்கள் சிலர், பொதுமக்கள் இருவரை சுட்டுப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த இராணுவ வீரர்கள் 11 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், நேற்று உத்தரவிட்டார்.
அந்த 11 பேரையும் எதிர்வரும் 10ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, அவர் இப் பிடியாணையை பிறப்பித்துள்ளார். இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய இராணுவவீரர்கள் ஐவரையும் எதிர்வரும் 10ஆம்திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு, யாழ். நீதவான் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more