Header image alt text

b1aceஇராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கோட்டையாக கருதப்படும் மொசூல் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் அந்நாட்டு மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் கைவசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மொசூல் நகரை நோக்கி அரசு படைகள் மற்றும் அதன் கூட்டணி படைகளும் முன்னேறி வரும் நிலையில், கடத்தப்பட்ட பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. Read more

calais_campபிரான்சின் வடக்கு பகுதியில் இருக்கும் கலே நகருக்கு அருகேயுள்ள சர்ச்சைக்குரிய குடியேறிகள் முகாம் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த முகாமில் இரு பெரும் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

ஏறக்குறைய வெறிச்சோடிக் கிடக்கும் ‘ஜங்கிள்’ என்று அறியப்படும் இந்த முகாமிலிருந்து இந்த வாரம் சுமார் 6 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில குழந்தைகள் உள்பட 80 குடியேறிகள் இன்னும் அங்கு இருக்கின்ற ஒரு பள்ளியிலும், ஒரு மசூதியிலும் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்று அறக்கட்டளை அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. Read more

malayagam00யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும், மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் குறித்த தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைகழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். Read more

eastern provinceயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்து கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வுக்காக துனை அவைத்தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஜெ. ஜனார்த்தனன் இவ் உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை சபையில் முன் வைத்தார். Read more

northern_provincial_council1உயரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கும் வட மாகாண சபையின் இன்றைய 64ம் அமர்வில் 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மாணவர்கள் படுகொலைக்கு உடனடி விசாரணை வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையேல் அரச இயந்திரத்தை முடக்குவோம் என மாகாணசபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர். Read more

police ...மட்டக்குளிய பிரதேசத்தில் 4 பேரின் உயிர் பலியான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை அண்மையில் இரத்தினபுரி பிரதேசதத்தில் வைத்து சம்பத்துடன் தொடர்புடைய குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்

jaffnaஒரு நாள் கடையடைப்பையடுத்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் வழமைக்குத் திரும்பியுள்ளது.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல் துறையினரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற விசேட புலனாய்வு துறையினர் தடயவியல் பரிசீலனை மற்றும் விசாரணை நடத்தினர். Read more

north-01கிளிநொச்சி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்துள்ள குறித்த சந்தேகநபரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அவரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. Read more

indiaயாழ் பல்கலைக்கலக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

bodyபாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீரவன்சவின் புதல்வரது நண்பரான 24 வயதுடைய லஹிரு திஸாநாயக்க என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அடிக்கடி அந்த வீட்டுக்கு வந்து போகும் குறித்த இளைஞர் நேற்றிரவும் அங்கு தங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. Read more