ஓய்வு பெறுவதற்காக ஒன்லைன் முறையில் பதிவு செய்துகொள்ளும் வழிமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இந்த வழிமுறை ஆரம்பிக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் குறிப்பிட்டார். ‘மகிழ்வுடன் இளைப்பாறுங்கள்’ என்பதே இம்முறை ஓய்வூதிய தினத்தின் தொனிப்பொருளாகும். தேசிய ஓய்வூதிய தினம் 2005ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு இலங்கையில் கொண்டாடப்படுகின்றது. Read more








