Header image alt text

parathi005மது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு.விஜய் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான மழைக்கவசங்கள் வழங்கி வைத்துள்ளார்;.

பாரதி இல்ல 108 சிறார்கள் மழைகாலங்களில் பாடசாலை செல்ல மழைக்கவசம் இல்லாது பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிரமப்படுகின்றார்கள் என்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் திரு.விஜய் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதை அடுத்து திரு.விஜய் அவர்களால் அவரது குடும்பத்துடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்துடன் நேரில் சென்று இல்லச் சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான 108 மழைக்கவசத்தை வழங்கி வைத்துள்ளார். Read more

parathi02எமது ஈழ உறவான இளவாலையைச் சேர்ந்த பிறேமாவதி அவர்களால் அவரது உறவினரான அமரர் வள்ளியம்மையின் 11 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (11ஃ12ஃ2016) முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்;கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ஊடாக 10000 ரூபா பெறுமதியான அரிசி பைகள் அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார். Read more

வவுனியாவில் இளைஞர்களுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

youth-conference03-jpgபுதிய அரசியலமைப்பில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பான விரிவுரைகளும் கலந்துரையாடலும்   13ஃ12ஃ2016 வவுனியா மாவட்ட அரச அதிபரின் கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட விரிவுரையாளர் திருமதி.கோ.மதன், யாழ்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன், வட மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் திரு தவராஜா ஆகியோர் விரிவுரைகளுடனான கருத்துகள் அறியும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Read more

இலங்கை எழுத்தாளர் (‘முல்லைமணி’) சுப்பிரமணியம்

mullaimaniமுல்லைமணி என்ற புனைபெயரில் எழுதி வந்த இலக்கியவாதியும், எழுத்தாளருமான சாகித்திய ரத்னா பரிசு பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணியம் (முல்லைமணி) 14.12.16 செவ்வாயன்று மாலை காலமானார்.

முல்லைமணி 1933ஆம் ஆண்டு முள்ளியவளையில் பிறந்தார். 1948ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பண்டித கலாசாலையில் கல்வி கற்றார். 1951ல் இவரது முதல் சிறுகதை வீரகேசரியில் வெளிவந்தது. Read more

vakaraiஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு வாகரை பிரதேச மக்கள் தங்கள் காணி உரிமையை வலியுறுத்தி இன்று புதன்கிழமை பிரதேச செயலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேசத்தின் சிவில் நிர்வாக மையமான பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயில் கதவுகளுக்கு பூட்டுப் போட்டு இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக செயலகத்தின் வழமையான அலுவல்கள் ஓரிரு மணித்தியாலயங்கள் தடைப்பட்டிருந்தன. Read more

repoபாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய 171 முறைப்பாடுகள் சம்பந்தமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 24ம் திகதியாகும் போது, பாரிய மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1600 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக அந்த ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச கூறினார். Read more

 ganjaமுல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக படகொன்றில் கடத்தி, திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா நிலாவெளி பிரதேசத்தில் வைத்து இன்று(14) அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். திருகோணமலை பிராந்திய துர்நடத்தை ஒழிப்பு பிரிவின் பொலிஸ் குழு ஒன்று குறித்த பிரதேசத்ததில் சுற்றி வளைத்து தேடுதல் நடாத்திய போது குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது. Read more

maithripalaநாட்டின் புதிய பரம்பரையை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே என்றும் ஜனாதிபதி கூறினார். Read more

unoஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார்.

ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. Read more

policeயாழ். கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி சுபாஷ் மஞ்சுள காந்தோல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கோப்பாய் பகுதியில் கஞ்சா புகைத்து விட்டு குழப்பத்தை தோற்றுவிக்கும் கும்பல் ஒன்று தொடர்பாக மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் அதிகாலை பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின்போது ஆறு இளைஞர்களை கைது செய்திருக்கிறோம். Read more