Header image alt text

mangala“காணாமல் போனோர் தொடர்பாக ஓர் அலுவலகத்தை ஆரம்பிக்க சட்டம் உருவாக்கினோம். அதற்கமைய, அந்த அலுவலகத்தை மிக விரைவில் ஆரம்பிக்க முடியும். ஆனால், அந்தச் சட்டத்தில் ஜே.வி.பி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

அதனைச் செயற்படுத்திய பின்னர், அந்த அலுவலகத்தை திறக்கமுடியும்” என்று, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். “இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில், கடந்த யுத்தத்தில் இடம்பெற்றதாககக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளையும் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்” என்றும் அவர் கூறினார். Read more

jaliya-wickramasuriyaஅரச பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை,

தொடர்ந்து 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாலிய விக்கிரமசூரிய சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைக்க பிணை மனுக் கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

gerமுல்லைத்தீவு, கேப்பாப்புலவின் பிரதான வீதி பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட வேண்டுமென கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாப்புலவு காணி முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கரைதுரைப்பற்று பிரதேச செயலர் சி.குணபாலன் கலந்துரையாடினார்.

இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தமது கிராமத்தின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். கேப்பாப்புலவில் இருந்து புதுக்குடியிருப்புச் செல்லும் பிதான பாதையினை இராணுவத்தினர் தடை செய்து வைத்துள்ளனர். Read more

youth parliamentகடந்த வருடம் நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதல் நாள் பாராளுமன்ற அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற த்தின் மாவட்ட தலைவர் மகேஷ் பெர்னான்டோ தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. குறித்த அமர்வானது இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவூட்டும் வேலைத்திட்டத்தின் கூடிய செயலமர்வாக அமைந்திருந்தது. நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து சிறப்பித்திருந்தார்

jail tamil captivesகொழும்பு மெகசின் மற்றும் அநுராதபுர சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரவுடன் கைவிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 57 பேரும், அநுராதபுர சிறைச்சாலையில் 19 பேருமே தமது உண்ணாவிரதத்தை நேற்றையதினம் இரவுடன் முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் இன்று முதல் அவர்கள் உணவு உண்ணுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் துசார உப்புல்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.

16326069_1091848884275566_1585733666_oவவுனியாவில் இளைஞர்களால் காணாமல் போன மற்றும் அரசியல் கைதிகளின் விடிவிற்கான இறுதித் தீர்மானத்தை நல்லாட்சி அரசு வெளியிட வேண்டும் என்று இளைஞர்கள் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து நேற்றுமாலை 4.00 மணியளவில் அமைதிப்பேரணியினை ஆரம்பித்து வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரத திடலின் முன்றலில் நிறைவு பெற்றது.

இளைஞர்களின் அமைதி பேரணியில் ஜனாதிபதிக்கான மகஜர் அரச அதிபரிடம் கையளிக்க இருந்த நிலையில், உண்ணாவிரத போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்த்தன அவர்களின் வருகை மற்றும் அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து நிறுத்திக் கொள்ளப்பட்டது. Read more

sasaஇலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்றுமாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது.

உண்ணாவிரதம் இருந்தவர்களை நேற்றுமாலை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக உண்ணாவிரதம் இருந்து வந்த காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார். Read more

sasaகாணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடும் மழை மற்றும் குளிருக்கு மத்தியில் 14பேர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா பிரதான தபால் நிலையம் அருகில் தற்காலிக கூடாரம் அமைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணாமற்போன தங்களின் உறவுகள் தொடர்பில் இறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more

anurathapuram-jailகாணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும், இன்றுகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 19 பேரும், கொழும்பு மெகசின் சிறைச்சாலையைச் சேர்ந்த 54பேருமே இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

ananthiநல்லாட்சி அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்ந்தும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்ற ஆதரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில், ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள், தங்களுடைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவார்கள். தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளை அளித்து, அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். Read more