விடுதலைப் போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை, நாகேந்திரபுரத்தைச் சேர்ந்த ரத்தினம் சின்னப்பிள்ளை அவர்களுக்கு 14,000/- ரூபா நிதியொதுக்கீட்டில் கட்டில், மெத்தை உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான பொருட்களை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் கடந்த 22.03.2017 புதன்கிழமையன்று வழங்கியுள்ளனர்.
மறைந்த கழக உறுப்பினர் பெறோஸ் (ரத்தினம் செல்வம்) அவர்களின் தாயாரான ரத்தினம் சின்னப்பிள்ளை அவர்கள் மிகவும் வயோதிபமடைந்துள்ள நிலையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினரால் இந்த அத்தியாவசிய உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் (கிளிநொச்சி மாவட்டம்) திரு.க.மகேந்திரன் (ராஜா) றொனி மாஸ்டர், செல்வம் மற்றும் சிவராசா ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.




