Header image alt text

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுதின நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 9.30மணியளவில் நடைபெற்றது. 
இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அன்னாரின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Read more

well03இன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி வள்ளிபுனம் முகவரியாக கொண்ட வி.ரஜனிதேவி என்பவருக்கு லண்டனைச் சேர்ந்த அண்ணாமலை கிருபாகரன் (ரூபா 88 000) மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆருசன் மிருசன் ஆகிய சகோதரர்கள் (ரூபா 57 000)  தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய நிதியில் இருந்தும் பயனாளியின் பங்களிப்பாக 500 சீமெந்து கற்றகளுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ரூபா 141,000 செலவில் புதிய கிணறு கட்டப்பட்டு பயனாளியின் பாவனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. Read more

masuthi01 masuthi02இலங்கையில் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மத பிரிவினருக்கு எதிரான வன்முறை செயல்பாடுகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டு. இது தொடர்பான விசாரனை நடத்த சட்டம் , ஓழுங்கு அமைச்சர் மற்றும் போலீஸ் மா அதிபதி ஆகியோயாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும். சிறுபான்மை மதங்களை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் வன்முறைகளை தூண்டுவோர் மற்றும் வன்முறைகள் சார்ந்த செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் Read more

eastதிருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான மூன்று பள்ளிக்கூட மாணவிகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. Read more

susanthikaபொருளாதார நெருக்கடி காரணமாக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கையின் மூத்த ஓட்ட பந்தைய வீராங்கனை சுசந்திக்கா ஜயசிங்க இலங்கையின் தனியார் தொலைகாட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது, 200 மீட்டர் ஓட்ட பந்தையத்தில் சுசந்திக்கா ஜயசிங்க வெள்ளி பதக்கமொன்றை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். Read more

uk 05லண்டனில் பாதசாரிகள் மீது வாகனமோதல், கத்திக்குத்து, 6 பேர் கொலை, 48 பேர் காயம்

லண்டனில் நேற்றிரவு நடந்த தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்றும் இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப்  லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். Read more

uk01 பிரித்தானியாவில் லண்டன் நகரில் ட்ரவர் பிறிட்ஜ் இல் நேற்று இரவு வாகனத்தல் பொதுமக்கள் மீது மோதி மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடந்திருக்கிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வெள்ளை நிற வான் ஒன்று வேகமாக வந்து அங்கிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. அச்சம்பவத்தில் கீழே விழுந்தவர்கள் சிலர் மீது வாகனம் ஏறியும் சென்றதாக கூறப்படுகிறது. Read more

vavunya missing01வவுனியாவில்  போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (03.06.2017) 100வது நாளாகவும் மழை, வெயில் என்பவற்றை பெருட்படுத்தாது தற்காலிக தகரக் கொட்டகைக்குள் தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். Read more

mangala-samaraweeraஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கம் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே நிதி மற்றும் ,ஊடகத்துறைஅமைச்சர் மங்கள சமரவீர இந்த விடங்களை குறிப்பிட்டார்.   Read more

missing01missing021நாம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகின்றோம் என கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊர்வலம் ஒன்றினை இன்று மதியம் மேற்கொண்டனர்.

வவுனியா, வீதி அபிவிருத்தி  அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 100 ஆவது நாள் இதனை முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர். Read more