மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தின்கீழ் தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளன. அதற்கான தேர்தல் தொகுதிகளை எல்லையிட்டு தேர்தலை அடுத்த மார்ச் மாதம் நடத்த உத்தேசித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
குறிப்பாக கிழக்கு மாகாண சபை தொடர்ந்து ஆளுநரின் அதிகாரத்தில் இருப்பதை சிறுபான்மை இன கட்சிகள் விரும்பவில்லை. அது தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள சிறுபான்மை கட்சிகள் விரைவாக தேர்தல் நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றன. Read more