Header image alt text

011111111புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து சுன்னாகம் மேற்கு அறிஞர் ஐயன்னா சனசமூக நிலையத்திற்கு இன்றுகாலை ஒரு தொகுதி தளபாடங்களை வழங்கிவைத்துள்ளார்.

வலிதெற்கு பிரதேச சபை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு. ரி.சுதர்சன் அவர்களின் முன்னிலையில் சுன்னாகம் மேற்கு அறிஞர் ஐயன்னா சனசமூக நிலையத்தின் தலைவரிடம் மேற்படி தளபாடங்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார். Read more

train strike (2)தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தொடரூந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று இரவு முதல் பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தன. Read more

missing and un metஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரான பவுலோ கிரீப் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளார். கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருநூற்று முப்பத்தைந்தாவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தீர்வு வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியிடம் நிலைமாறு காலநீதி சம்பந்தமாகவும் அதில் உள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் உறவுகளான தம்முடன் கலந்தாலோசிக்காது எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளனர். Read more

IMG_6533வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க. சிவநேசன் அவர்கள் நேற்றுமுன்தினம் (10.10.2017) மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் மற்றும் அம்பாள்புரம் 5ம்கட்டை ஆகிய பிரதேசங்களின் பொதுமக்களையும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பாண்டியன்குளம் சந்திப்பில்,
1 சிராட்டிக்கும், முறியாக்குளத்தின் கீழ்வரும் 100 ஏக்கர் வயல் நிலங்களில் பயிர்ச் செய்கையிலீடுபட மேற்கொள்ளப்படவேண்டிய ஆயத்த நடவடிக்கைகள்,
2 நட்டாங்கண்டல் -சிராட்டிக்குளம் வீதியின் புனரமைப்பு,
3 மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் செயலற்றுக் கிடக்கும் குழாய்க் கிணறுகளின் சீரமைப்பு, Read more

boblo de newஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபை குழுவினர் இன்று காலை இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

யுத்தத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். Read more

1030443011investigationதாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து பெருந்தொகைப் பணம் இலங்கையிலுள்ள வங்கி ஒன்றுக்கு பரிமாற்றப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவியளிக்கவே அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

high wayவழக்கமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற பருவகாலச் சீட்டு (சீசன்) இருப்பவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

அதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுகின்ற அதிசொகுசு பஸ்களிலும் பயணிகள் பயணமம் மேற்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். நேற்று இரவு முதல் புகையிரத சாரதிகள் மற்றும் புகையிர காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். Read more

199056994village-in-eastமட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைப் பிரிவில் காணப்படும் புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்ட மீள் குடியேற்ற கிராம மக்கள் வரட்சி மற்றும் யானைகளின் தொல்லைகளால் பெரிதும் கஷ்டப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

புனாணை மேற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்ட மயிலந்தனை, காசலம்பன்சேனை, அணைக்கட்டு, முள்ளிவட்டவான் ஆகிய கிராமங்களில் 230 குடும்பங்களின் 830 பேர் வசித்து வருகின்றனர். இதில் மயிலந்தன்னை கிராமம் கடந்த கால அசாதார சூழ்நிலை நிலவிய காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமாகும். Read more

a1 - Copyவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாக கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு இன்று ரூபா 20,000 பெறுமதியான வீட்டுக்கான 10 கூரை தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தனது விண்ணப்பத்தில், நானும், கணவரும், 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருகிறோம், எங்களது வீட்டு கூரை ஓலையால் அமைந்துள்ளது. தற்போது கூரை பழுதடைந்துள்ளது. பருவ மழை தொடங்குவதால் நாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. Read more

thalatha athukorala“அரசியல் கைதிகள் என்றொரு பிரிவினர் நாட்டில் இல்லை” என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். நீதியமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்னவென, ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், கைதிகளை பறிமாற்றிக்கொள்வது தொடர்பில், உலகில் பல்வேறான நாடுகளுடன் நீதியமைச்சு ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது. Read more