Header image alt text

UAE Sri Lankaஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கும் இலங்கைக்கும் இடையில் தொழில்துறை புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்துக்கு தொழிலுக்காக அனுப்பப்படுவர்கள் தொடர்பான தகவல்களை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக பரிமாறிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், பணியாளர்களை உள்வாங்கும்போது வெளிப்படைத் தன்மையுடனும், அந்த நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய பணிக்காக பணியாளர்களை அனுப்பவும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ceylon india shipகொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவுசெய்ய விண்ணப்பங்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது குறித்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

singapore lllசிங்கப்பூர், சுர்பானா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கிடையிலான விசேட கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இன்று நடைபெற்றது.

திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்காக பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் சாரம்சங்களையும் அத்திட்டத்தைத் தயாரிக்கும் வரையறையையும் தெளிவுபடுத்தும் விதத்திலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

australia refugeesஅவுஸ்திரேலியாவின், பபுவா நியூகினியாவில் உள்ள மனூஸ் தீவில் தற்கொலை செய்து உயிரிழந்த, இலங்கை அகதியை, தாய்நாட்டுக்கு அனுப்புவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார். மனூஸ் தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 32 வயதுடைய ரஜீவ் ராஜேந்திரன் என்பவர் கடந்த திங்கட்கிழமை (02) உயிரிழந்தார். Read more

US green Card2018 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் க்ரீன் கார்ட் எனப்படும் பல்வகைமை விஸா சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதிவரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இந்த சீட்டிழுப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்காக விண்ணப்பதாரிகள் ஒருமுறை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. Read more

ranil wickramasingaதனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை ஜேர்மன் விஜயம் செய்யவுள்ளார். மேலும், ஜேர்மன் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு, எதிர்வரும் 9ம் திகதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமாக பின்லாந்துக்கு செல்லவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தல், வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தல் என்பனவே இந்த விஜயத்தின் நோக்கம் என, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. Read more

ddfdதமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,

வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம் யாழ். பல்கலைகழகம் முன்பாக காலை 10மணி தொடக்கம் 11மணி வரையில் முன்னெடுக்கப்பட்டது. Read more

deadஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுகுட்பட்ட காஞ்சிகுடா பாவட்ட குளத்தடியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரை, யானை தாக்கியதில், ஸ்தலத்திலே அக்குடுப்பஸ்தர் மரணமடைந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 2, பாடசாலை வீதியில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தந்தையான கிருஸ்ணபிள்ளை சதாசிவம் (வயது 52) என்பவரே, மரணமடைந்தவராவார். Read more

national children protectionசிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, கடந்த வருடம் நாடளாவிய ரீதியில், 9,361 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளனவென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மலையகத்திலுள்ள 7 மாவட்டங்களில், 2,277 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென, அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் 271 சம்பவங்களும் கண்டி மாவட்டத்தில் – 407, Read more

hஅம்பாறை பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று வீடுகள் மீது, இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, எட்டுப் பேர் அடங்கிய குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலில் 83 வயதான பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டவர்கள் கிராமவாசிகள் என அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். Read more