Header image alt text

4555நுவரெலியா மாவட்டம் ஹட்டன் டிக்ஓயா நிவ்வெளி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 200 பெண் ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று மயக்கமடைந்த நிலையில் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆடை தொழிற்சாலையில் பெற்றுகொடுக்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையினால் குறித்த ஊழியர்கள் திடீர் மயக்கமுற்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

teacherஅதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொள்வதற்காக, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், எதிர்வரும் ஆசிரியர் தினத்தன்று, பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு இன்மை, 2016-2017 சுற்றுநிருபத்துக்கு அமைய அதிபர்களுக்கான கொடுப்பனவை வழங்காமை, ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவையை வழங்காமை போன்ற பல காரணங்களை முன்வைத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. Read more

saarcதெற்காசிய சார்க் வலய சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 8 ஆவது மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.

தெற்காசிய வலயத்தில் வாழும் மக்களின் நட்புறவினை மேம்படுத்தல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பினை வலுப்படுத்துவதற்காக கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநாட்டிற்கு இணையாக தெற்காசிய நாடுகளின் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

universityஅரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகம் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த வாரம் முதல் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தங்களது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களில் இருந்து மாற்றுவதற்கு எதிராகவும், தங்களது விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. Read more

தமிTamil_people peravaiழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என தமிழ் மக்கள் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் அடிப்படைப் பிறப்புரிமைகள் மறுதலிக்கப்படுகின்ற இடைக்கால அறிக்கையை பிரதான இரண்டு கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் தாமும் அதனை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளமை மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more