உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
களுவாஞ்சி குடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள குறுக்கு வீதியில் பாழடைந்த கிணற்றினுள் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக குறித்த பகுதியிலிருந்து துர் நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கோட்டை கல்லாற்றை சேர்ந்த தம்பிமுத்து செல்லத்துரை என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஐந்து சிறுவர்கள் சிறுவர் நன்நடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து சிறுவர்களும் மின்சார வயர் மற்றும் ஹொக்கி துடுப்புமட்டை போன்றவற்றால் தாக்கப்பட்டுதாகவும், உடலின் பல பகுதிகளிலும் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறுவர்கள்அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை கடத்த முயற்சித்த 5 சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம் குற்றத் தடுப்பு பிரிவினர் என தெரிவித்து, குறித்த மருத்துவரை சந்தேகநபர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை மேலும் தெரிவித்தது. Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இவ்வாறு கூறியுள்ளார். அதேவேளை வாக்கெடுப்பு மத்திய நிலையங்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய வீதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தாயான 27வயதுடைய அகிலேஸ்வரன் புஸ்பராணி என்பவரே, இன்று காலை மர்மமான முறையில் உயிரிந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் குழந்தையின் பலத்த அழுகுரலை அவதானித்த வீதியில் சென்றவர்கள், உள்ளே சென்று பார்த்தவுடன் குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்து கிடந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
மண்சரிவு அனர்த்தம் ஏற்படகூடிய பிரதேசங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இதுவரையிலும் 3,275 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் அந்த நிறுவகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று இனங்காணப்பட்டுள்ள இடங்களில், 2000 குடும்பங்கள் வாழ்வதாகவும் அந்த நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில், இந்தோனேசியாவில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 28பேரும்
இன்றையதினம் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது நேற்று கைது செய்யப்பட்ட 28 பேரும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியமை மற்றும் பொது செத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இவர்கள் 28 பேரும் கைது செய்யப்பட்டனர். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரால் ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 7 October 2017
Posted in செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலுக்கு அமைய, கொழும்பு மெகசின், வெலிக்கடை, அனுராதபுரம், போகம்பர, நீர்கொழும்பு, மஹர, பொலநறுவை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை ஆகிய சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. Read more