Header image alt text

image_9fafe20fdeஅவுஸ்திரேலிய பிரமர் மெல்கம் ட்ரன்புல், எதிர்வரும் 2ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று,

கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

protest-7ஆசிரியர் நியமனங்களுக்காக அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதேவேளை, தாம் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கல்முனையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ewrewrewவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் அமைதி வழி போராட்டம் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை சிவன்கோயிலடி வளாகத்தில் இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Vavuniya-accidentவவுனியா பனிக்கநீராவி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 யுவதிகள் உள்ளிட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றுடன் பௌசரொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

sfdfddயாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததால்

இவ்வாறு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்தாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்த வகுப்பு புறக்கணிப்பிற்கு பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களும் ஆதரவு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசியல் கைதிகளுக்கு தீர்வொன்றை பெற்று தருமாறு வலியுறுத்தி இன்று பல்கழைக்கழத்திற்கு முன்பாக பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
Read more

sfdfdfdffdfdfஅரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் ஆரம்பத்திலேயே குழப்ப நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

அதில், ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து கருத்து வெளியிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய, 2000 பேரளயில் மக்கள் இணைந்து பாதையை இடைமறித்துள்ளதாக பொலிஸார் எமக்கு கூறினார்கள். 2000, 3000 பேரளவில் நாடாளுமன்றத்துக்கு அத்துமீறி நுழைய தயாராக உள்ளதாகவும், அதற்கு பொலிஸார் இடமளிக்கமாட்டார்கள் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். Read more