Header image alt text

sssssவிவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினுடைய உப அலுவலகம் இன்றுகாலை மாங்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.

முன்னதாக மாங்குளம் இத்தியடி சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து படங்கள் எடுத்துவரப்பட்டு சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் அவர்களால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. இதன்போது கலந்துகொண்ட பலரும் நீண்ட நாளாக வடமாகாண சபைக்கான அலுவலகங்கள், மாங்குளத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்னுதாரணமான செயற்பாடு என அமைச்சின் அமைச்சர் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தனர். Read more

ddddவடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினுடைய மாதாந்த ஆலோசனைக்குழு கூட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் தொடர்பான திணைக்களங்களால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் இவற்றிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. Read more

railwayசம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சேவையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, தங்களது கோரிக்கைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதியுடன் அவர் கலந்துரையாடி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

werwerewசிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் அவர் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் நிட்டம்புவ பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை கைதானார்.

saarcஹர்மன் லூஸ் வெற்றிக் கிண்ண முகாமை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள ஐந்து சார்க் நாடுகளின் தேசிய சாரணர் குழு இன்றுகாலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.

பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சாரணர் குழுக்களும், அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். ஓவ்வொரு குழுவுக்கும் பொறுப்பான உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அன்பளிப்புகளை வழங்கியதுடன், அந்த அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கியுள்ளனர்.

image_bfa98f78eaமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும்,மகனும் அடித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சவுக்கடி,குடியிருப்பு முருகன் கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 27வயதுடைய தாயும் அவரது 11வயதுடைய மகனும் அடித்துக் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். Read more

jailஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால், உறவினர்களின் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்பட்டதாக தெரியவரவில்லை. அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, பிரதி சட்டமா அதிபர், துணை சட்டமா அதிபர், பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். Read more

teacherவேதனம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தொடரூந்து சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர். தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க தலைவர் லால் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தொடரூந்து சாரதிகள், நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

indo-deadஅவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ் குருநகரைச் சேர்ந்த 36 வயதான ஜோன்சன் ஜேசுதாஸ் ஜெயதேவ் என்ற இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 1990ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள அகதி முகாம் ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2010ஆம் ஆண்டு முதல் வெளிநாடு செல்வதற்கு முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில், படகின் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டதனால் கைது செய்யப்பட்டு, இந்தோனேசியாவின் ஜகர்த்தா தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார். கடந்த 17ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

asdsசுவிற்சர்லாந்தில் சுட்டுகொல்லபட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் இறுதிக்கிரியைகள் மற்றும் விசாரணைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் நேற்றிரவு 9 மணியளவில் சுவிற்சர்லாந்துக்கு நோக்கிப் பயணமாகியுள்ளனர்.

கட்டுநாயக்கா விமானநிலையத்திலிருந்து சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இவர்கள் பயணமாகியுள்ளதாக அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்தனர். இன்று வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் லுகநோ, ரிசிநோ பகுதியில் சுட்டுகொல்லபட்ட கரனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ள நிலையில் இவர்கள் அதில் பங்குகொள்வார்கள் என தெரியவருகின்றது. Read more