Header image alt text

1284526037protest-in-trincoவடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் புதிய அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை நகர் மணிக்கூடு கோபர சந்தியில் இன்று ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னனியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. காலை 10.45 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 11.45 மணியளவில் முடிவுற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராகவும் மற்றும் எதிர்கட்சி தலைவர், பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர். Read more

operationயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகள், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.

அண்மையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். Read more

missing andankulamமன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, அவரது மனைவி நேற்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை நடத்தி வரும் சன் நீக்கிலாஸ் (குணபால்) என்பவரே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 076-8400798, மற்றும் 076-7480357 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

former LTTE membersவவுனியா, கனகராயன்குளம் பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்களைப் பொலிசார் திரட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருடைய விபரங்களை பெறுவதற்காக நேற்று 27ஆம் திகதி முற்பகல் உறவினருக்கு கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது குறித்த முன்னாள் போராளி எங்குள்ளார்? என்ன தொழில் புரிகின்றார்? திருமணமாகியுள்ளதா? போன்ற விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளதாக முன்னாள் போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். Read more

elle gunawansa theroஅனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், புதிய அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் கோரியுள்ளார். அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அறிக்கை குறித்து, எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

TNAதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளது.

குறித்த அறிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் முதலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முழுமையான இணக்கம் இதுவரை எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று மாலை இடம்பெறவுள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகிறது. Read more

mahindaமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று காலை இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று மற்றும் நாளை இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச பௌத்த சம்மேளத்தின் பிரதான விருந்தினராக கலந்து கொள்ள அவர் இவ்வாறு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

trainரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தக் கட்டண அதிகரிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகவுள்ளது.

குறிப்பாக, இந்தக் கட்டண உயர்வு ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. எனினும், கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லையென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.