Header image alt text

ஒ-1சுவிட்சர்லாந்ந்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் கட்டுப்பாட்டிலிருந்த மேலும் இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை கத்தியால் குத்துவதற்கு குறித்த நபர் முயற்சித்ததாகவும், அவர்களைக் காப்பாற்றும் நோக்கிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுவிட்சர்லாந்து பொலிஸார் கூறியுள்ளனர். Read more

sri lanka north koreaவடகொரியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரியா, உலக நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றது. Read more

flightஇலங்கை விமானப்படைக்கு 16 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வகையில், குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் என விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் போர் விமானங்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

trinco riversதிருகோணமலையில் புனரமைக்காமல் காணப்படும் 100 குளங்களை, அடுத்த வருட இறுதிக்குள் புனரமைத்து தருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில், விவசாயத்தின் விளைச்சல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஏர்பூட்டு விழாவில், பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
Read more

accidentகண்டி தெல்தெனிய பகுதியில் திகண பிரதேசத்தில் இன்று தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் 2பேர் பலியானதுடன் குறைந்தது 20பேர் காயமடைந்தனர். இதேவேளை களுத்துறை மாவட்டம் மத்துகம, கலவான வீதியிலுள்ள பதுரெலிய மிதலான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதான குழந்தை உயிரிழந்ததுடன் 12க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகினர். Read more

taiwan sri lanka“தாய்வானில் உள்ள ஃபா -ஈஸ்டன் எனும் சர்வதேச வங்கியில் இருந்து கொள்ளையிடப்பட்ட ஒருதொகை பணம் இலங்கையில் உள்ள வங்கிகளிலும் வைப்பில் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சர்தேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தாய்வான் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

land slideநிலச்சரிவு அவதானிப்பு இயந்திரம் ஒன்றை நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு கையளித்துள்ளது. நோர்வேயின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தோர்பஜோன் காஸ்ட்டாஸ்ட்டர் இந்த இயந்திரத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கையளித்துள்ளார். Read more

indrajith kumarasamyநுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுமாறு பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. Read more

courtsஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்குள் பிரவேசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா நேற்றுமாலை இந்த பிணை அனுமதியை வழங்கியுள்ளார். Read more