Header image alt text

yu5tயாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்ய்பட்ட 21 பேரின் நினைவு தினம் இன்று நினைவு கூரப்பட்டது. 30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. Read more

tytyஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடமாடும் சேவை இன்று வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது 5 ஆயிரம் பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கும் சுயதொழில் உதவி வழங்கும் நிகழவும், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

t1 - Copyஎமது புலம்பெயர் உறவுகளான லண்டன் நாட்டைச் சேர்ந்த சகோதரர்களான ரவீந்திரன் குணாளன், ரவீந்திரன் குமணன் ஆகியோரால் தமது தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த கால யுத்தத்தினால் பொருளாதார நிலையில் பின்தள்ளப்பட்ட

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட வள்ளிபுணம் மகாவித்தியாலத்தைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கமைவாக இன்று கணித உபகரண பெட்டிகளை அன்பளிப்பாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கி வைத்துள்ளனர். Read more

image_8bd2529e2cஅம்பாறை வீரகொடபல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உஹனவில் இருந்து அம்பாறை திசை நோக்கி பயணித்த தனியார் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கால்வாய் ஒன்றில் வீழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 12 பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலும் 3 பேர் காயமடைந்து மத்திய முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

arambepola-rathanasar-theroநேற்று கைது செய்யப்பட்ட சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் அரம்பேபொல ரத்னசார தேரர் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். Read more

knife killedவவுனியா, குடியிருப்பு பூங்கா வீதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா (வயது-56) என்பவர் குடியிருப்பு பூங்கா வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணிபுரியும் வர்த்தகருக்கு கொடுத்த பணத்தினை மீள்ப்பெற சென்றுள்ளார். அச் சமயத்தில் குறித்த இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது. Read more

anuradhapuram jailமூன்று தமிழ் அரசியல் கைதிகள் இன்று 27 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும், கைதிகள் நலமாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவர்களின் உடல்நிலை குறித்து வைத்தியர்கள் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக துஷார உபுல்தெனிய மேலும் கூறியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளும், கடந்த மாதம் 25ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். Read more

indian boatநடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, கடல் சீற்றம் காரணமாக குறித்த படகு கடலில் மூழ்கியுள்ளது.

படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர். சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 28 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more