Header image alt text

Sirimevan-Ranasinghe-626x380புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனத்தினூடாக சிறிமெவன் ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ranjanபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை மீண்டும் நவம்பர் 21ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில்,

மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்க அவர் இன்றையதினம் நீதிமன்றம் சென்றிருந்தார். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sisilaலிற்றோ கேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலில முணசிங்க உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் பணம், இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடaயம் தொடர்பில், இவர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

hivவடமாகாணத்தில் இந்த ஆண்டில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 6 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாலியல் தொற்றுநோய் தடுப்பு சிகிச்சைப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டில் இருந்து அண்ணளவாக 80 பேருக்கு எயிட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட எச்.ஐ.வி சிகிச்சை பிரிவில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகிய 39 பேர் வரையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். Read more

maithripalaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் கட்டாரிற்கு பயணமாகியுள்ளார்.

கட்டாரிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதியை கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் செயிக் அஹமட் பீன் ஜசீம் மொஹமட் அல்தான் உட்பட உயரதிகாரிகள் வரவேற்றுள்ளனர். கட்டார் மன்னர் மற்றும் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று மாலை கட்டார் வர்த்தக சங்கத்தினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

housing schemeவடக்கு, கிழக்கில் நிர்மாணிக்கப்பட உள்ள 50 ஆயிரம் வீடுகள் திட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி இதனைத் தெரிவித்தார். யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்ற அடிப்படையில் குறித்த பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் கூறினார். Read more

president iquiry commissionபாரிய ஊழல் மோச­டிகள் குறித்து ஜனா­தி­பதி விசா­ர­ணை­கள் ஆணைக்­கு­ழுவின் பதவிக் காலத்தை மேலும் மூன்று மாதங்­க­ளுக்கு நீடிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது. ஆணைக்­கு­ழுவின் இறுதி அறிக்கை பூர­ண­மாக முன்­வைக்­கவே கால நீ­டிப்பை கோரு­வ­தாக ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் எச்.டபிள்யு குண­தாஸ தெரி­வித்தார்.

ஆணைக்­கு­ழு­வினால் கடந்த இரண்­டரை ஆண்­டு­கா­லப்­ப­கு­தியில் அரச சொத்­துகள் தொடர்­பான 34 பாரிய மோச­டிகள் குறித்த விசா­ர­ணைகள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. சட்ட நட­வடிக்­கை­க­ளுக்­காக அவை தொடர்­பான 17 அறிக்­கைகள் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன. Read more

zfsddfமுல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை பாடசாலைக்கு முன்பாக புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று பிற்பகல் தேடுதல் நடத்தப்பட்டது. நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லையென கூறப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் கனரக வாகனத்தை பயன்படுத்தி சிறப்பு அதிரடிப்படையினர், வான்படையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Accident-1-626x380தம்புள்ளை குலாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை கெக்கிராவ பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றும் அனுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. Read more

election meetஉள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஜனவரி 27ம் திகதி நடாத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றுமாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 27ம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.