அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது. உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது.
மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் புதிய பதிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. Read more