மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிரந்தரமாக தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக்கோரி இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு அருகாமையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். இந்த நிலையில், புதிய அரசாங்க அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நில் அல்விஸ் மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது. Read more