Header image alt text

jailதமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எனினும், அவர்களின் உடல் நிலையில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அவர் கூறினார். வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தமது வழக்குகளை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். Read more

htyyவவுனியா பன்றிக்கெய்தகுளம், மரையடித்தகுளம் பகுதியிலுள்ள 45 இந்திய வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமக்கு சுத்தமான குடிநீர் வழங்குமாறு கோரி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏ9 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால், போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் தடைப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை உதவி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.ஏ.எம்.ஜயசேன போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி, உடனடியாக தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாளைய தினமே இப்பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வு பெற்றுத்தருவதாகவும் அளித்த வாக்குறுதியையடுத்து மக்கள் வீதியை விட்டு அகன்று சென்றனர். Read more

1513450495solitary L“சொலிடாரிடி சென்றர்” சட்ட உதவி அலுவலகம் நேற்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இந்தியன் இல்லத்திற்கு அருகாமையில் நேற்று குறித்த கட்டிடம் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தனர். Read more

american shipஅமெரிக்காவின் யுத்தக் கப்பலான லிவைஸ் என்ட் க்ளார்க், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. 210 மீற்றர் நீளமானதும், 32 மீற்றர் அகலமானதுமான இந்த கப்பல், இரண்டு உலங்கு வானூர்திகளையும் கொண்டது.

இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் அங்கு நங்கூரமிட்டிருக்கும். தயார்நிலை பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக மேற்படி லிவைஸ் என்ட் க்ளார்க், கப்பல் அங்கு நங்கூரமிட்டிருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

saddsadமுல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றில் இருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் இன்று மாலை நடந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சுற்றுவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. வெடிமருந்துகள், துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிக்கப்படும் பொருள்கள் என்பன மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

colvinஇலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சர் உயர்மட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசியர் காலோ பொன்சேக்கா இதற்கு முன்னர் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொல்வின் குணரத்னவை நியமித்தமைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, வைத்திய சபைக்கு முன்பாக, மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Read more

nishantha paliththaஎவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட குற்றப் பத்திரிகையை கையளித்த பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்க நீதிபதி ஆர்.குருசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சந்தேகநபர்களின் கைரேகையை பெற்று அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு இதன்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read more

948779050polic 2வட பகுதிக்கு ஆயிரம் தமிழ் பொலிஸார் உடனடியாக தேவை. பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்கு பெண்கள் முன்வந்து விண்ணப்பிக்க வேண்டுமென சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். வட கிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேட விதமாக இந்த முறை வட கிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வட கிழக்கிலேயே நடைபெறவுள்ளது. அவர்கள் பயிற்சிக்கு வடகிழக்கு வெளியில் போக தேவையில்லை. எனவே மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும். Read more

central_provinceஉத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்த மக்கள் கருத்து பெறப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை எரித்து மத்திய மாகாண சபையில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அம் மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மேலும், குறித்த அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த ஆகமம் மற்றும் தற்போதுள்ள மாகாண சபை அதிகாரங்கள் போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்கள் உள்ளதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பிரேமவங்ச சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இன்றைய சபை அமர்வின் போது குறித்த அந்த அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ggggggவவுனியா மாவட்ட செயலகத்தினால் எமது சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இன்று வவுனியா மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சுமார் ஒரு இலட்சத்து தொண்ணூராயிரம் ரூபா பெறுமதியான 12 புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிதி அனுசரனையினை புலம்பெயர் உறவுகளான லண்டனைச் சேர்ந்தவர்களான அன்பர் ஒருவரும்(ரூபா 100000) திரு.கந்தசாமி ஞானேஸ்வரன் (ரூபா10000) கனடாவைச் சேர்ந்த தம்பையா சந்திரகுமார் (ரூபா 50000) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த லட்சுமநாதன் ஜனகராஜ் (ரூபா 31800) ஆகியோர் வழங்கியிருந்தனர். இதற்கான வாகன வசதியினை கனடாவிலுள்ள திரு.துரை சண்மகநாதன் அவர்கள் (ரூபா 10000) வழங்கியிருந்தார். Read more