Posted by plotenewseditor on 23 October 2017
Posted in செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்கள் அறிவித்துள்ளன.
இப் போராட்டம் தொடர்பாக அவர்கள் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து வேட்டை போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானம் செய்துள்ளோம். இப் போராட்டத்தில் நாம் அரசியல் கைதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். Read more