Header image alt text

foreign-ministryகேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது. கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவையும் வழங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினுக்கும் இலங்கைக்கும் நீண்ட காலமாக சிறந்த இராஜதந்திர உறவு நிலவுவதாக சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு முக்கிய உறுப்பு நாடாக ஸ்பெயின் விளங்குவதாகவும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

iranஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான, கலாச்சாரம், அறிவியல் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளிலான உறவினை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள, மொஹமட் கரீப் அனிஸ்சின் நியமனப் பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வின் போதே, ஈரான் ஜனாதிபதி மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். Read more

ssdஇணைக்கப்பட்ட வடகிழக்கிலேயே புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வுத் திட்டத்தினையும் ஏற்பதற்கான ஆணையை அரசியல்வாதிகளுக்கு வழங்கவில்லையென, கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அத்துடன், வடகிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள் இணைந்து முதன்முறையாக இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
Read more

vimal (12)அரசாங்கம் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடொன்றை முன்னெடுத்துவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தங்கொட்டுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலத்தில் யுத்தம் இடம்பெற்றபோது அனைவருக்கும் தேசத்தைப் பற்றிய உணர்வு வலுவாக இருந்தது. நாட்டில் என்ன நடக்கின்றது என்பதை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். Read more

landslide-warningநாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இரத்­தி­ன­புரி, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read more

thumb_large_thumb_malabeசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சைட்டம் நிறுவனத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் அரச வைத்தியசாலைகளில் பயிற்சிகளைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. Read more

accidentயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இணுவிலில் இராணுவ வாகனம் மோதுண்ட 36 வயதான பாலகிருஸ்ணன் விஜிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த விஜிதரன் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவரை அந்த வழியே பயணித்த இராணுவ கப் ரக வாகனம் மோதித் தள்ளியுள்ளது. Read more