Header image alt text

swiss deadசுவிட்சர்லாந்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன், சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் வீட்டிற்கு இன்று விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அவர் உயிரிழந்தவர் தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த சனிக்கிழமை (07) பொலிசார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் புகலிடக் கோரிக்கையாளரான 38 வயதான சுப்பிரமணியம் கரன் என்ற இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

sdafஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சேலைன் ஏற்றப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.

மற்றுமொரு அரசியல் கைதி தொடர்ந்தும் சிறைக்கூடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2012 ஆம் ஆண்டு வௌ;வேறு காலப்பகுதியில் இவர்கள் மூவரும் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

namalபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ, டி.வி.சானக்க, பிரசன்ன ரணவீர மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, அஜித் பிரசன்ன ஆகியோருக்கு, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது. Read more

tear gas 010மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, வைத்திய பீட மாணவர்கள், இன்று கொள்ளுப்பிட்டியில் மேற்கொண்ட ஆர்பாட்டப் பேரணி மீது, பொலிஸார் குண்டாந்தடி பிரயோகம் மேற்கொண்டதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

ranil finland minister metபின்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்தநாட்டின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் பிர்க்கோ மற்றிலாவை சந்தித்துள்ளார். பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில், ரணில் விக்ரமசிங்க தமது நாட்டுக்கு வருகைதந்தமையை விசேடமாக கௌரவிப்பதாக மற்றிலா இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனநாயகம், மனித உரிமை, சமூக சமநிலை, கல்வி மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் பின்லாந்திற்கும் இடையில் இருந்துவரும் அடிப்படை, சமமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

british conservative partyஇலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்குதல், மறுசீரமைப்பு பொறிமுறை உள்ளிட்ட பல உறுதிமொழிகள் அரசாங்கத்தினால் சர்வதேசத்திடம் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்ஃபன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். Read more

sdafஅநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், தொடர்ந்தும் 16 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இன்றைய தினமும் உணவை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “கைதிகள் மூவர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் சிறைச்சாலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும் அவர்கள் உணவைத் தவிர்த்து வருகின்றனர். Read more

malik and kabirஅமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் அவர்களை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு வருமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சாட்சிமளிப்பதற்காக இன்று ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

dgffமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். Read more

donald gebriyalsonசீனாவுடன் இலங்கை இணைந்து செயற்படும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ரியட் அட்மிரல் டொனால்ட் டி கெப்ரியல்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரம் உள்ளிட்ட பிராந்திய ரீதியாக ஏற்கனவே சீனா அனுபவித்த அனுகூலங்களை மீள ஒழுங்கமைப்பதன் ஊடாக, அதிக சாதக நிலைமைகளை உருவாக்கிக் கொள்ள சீனா முயற்சித்து வருகிறது. அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பலத் தரப்பினரும் சீனாவுடன் இணைந்து செயற்படுகின்றன. Read more