Header image alt text

shot deadயாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் பொஸ்கோ ரிச்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. Read more

sasadsadasdமட்டக்களப்பு, தாழங்குடாவிலுள்ள வீடொன்றிலிருந்து ஆறு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமி (வயது 47) எனும் பெண், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், சடலமாகக் கிடப்பதை கண்ட அவ்வீட்டிலுள்ளவர்கள், காத்தான்குடி பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார், பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதுடன், ஆரம்பக்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். Read more

protest-4மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பெண்ணின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கூழாவடியில் வசிக்கும் 43 வயதான சிவகுமார் லதாஸ்ரீ பிரசவ வலி காரணமாக கடந்த நான்காம் திகதி பிற்பகல் 7.00 மணிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 7.30 மணிக்கு குழந்தையை பிரசவித்துள்ளார். வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய சத்திரசிகிச்சை மூலம் ஆண்குழந்தை குழந்தை கிடைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். Read more

ssssஎமது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நிவேசன் அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள குரவில் தமிழ் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக பாடசாலை சீரடை துணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி விண்ணப்பத்தில் பாடசாலை அதிபர் தெரிவிக்கையில், கடந்த கால யுத்தத்தின்போது தங்களது பாடசாலையும் பாதிப்புக்குள்ளானதாகவும், இங்கு கல்வி கற்க்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சீருடையை தவிர மாற்று சீருடை வேண்டுவதற்கு வசதியற்றவர்கள் எனவே தங்களால் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை தந்துதவுமாறு குறிப்பிட்டு இருந்தார். Read more

manoj gamageஅடுத்த ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாது போனால் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சட்டத்தரணிகள் சங்க ஒன்றியம் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

அடுத்தவருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது போனால் பதவி விலகுவதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார். அவரால் ஜனவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடியாவிடில் அந்த பதவியில் இருந்து விலகி, தேர்தலை நடத்தக்கூடிய முதுகெழும்புள்ள அதிகாரியொருவருக்கு அந்த பதவிலைய வழங்க வேண்டும் என சங்கத்தின் இணைப்பாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். Read more

LTTEஇறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகளின் தொலைத்தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்ட முக்கிய நிலைய ஆவணம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாப கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் ஏற்கனவே சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்றுள்ள நிலையில் அந்த இடத்தில் குறித்த நிலையக் குறியீட்டு ஆவணம் காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். Read more

gotabaya rajapakseசாதாரண தமிழ் மக்களின் தேவை தமிழ் அரசியல்வாதிகளின் தேவையாக இல்லையென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என குறிப்பிட்ட ஒரு தரப்பினர் இருந்தனர். அவர்கள் தற்போது அரசியல் அமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என கூறுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளின் தேவை சாதாரண தமிழ் மக்களின் அபிலாஷையாக இல்லை. கடந்த காலங்களில் பெருவாரியான விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகமயப்படுத்தப்பட்டனர். Read more

vidya (1)நேற்றைய தினம் வவுனியாவிற்கான பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

வவுனியா, குருமண்காட்டில் அரசாங்கத்தினால் வித்தியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வீட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வசிக்கும் வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் ஜனாதிபதியுடன்அங்கு சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.