shot deadயாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த டொன் பொஸ்கோ ரிச்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் தொன் போஸ்கோ ரிஸ்மன் என்வர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.