Header image alt text

railway strikeகொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் ரயில் சேவைகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. ரயில் சாரதிகளின் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களின் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் ஒழுங்கு விதிகள் சீர்த்திருத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரயில் சாரதிகளின் பணிபகிஷ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள ரயில் தாமதம் காரணமாக பயணிகள் குழப்பமடைந்துள்ளதால் கோட்டை ரயில் நிலையத்தில் தீவிர நிலை ஏற்பட்டிருந்தது. Read more

bablo de greepஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இன்று திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யுத்தத்தின்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள், ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை ஆராய்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிரீஃப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். Read more

external affairs ministryஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. Read more

teachersதொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு அதிகமாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையை பிரகடனப்படுத்துமாறு கல்வி அமைச்சர் அகில விராச் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமையவே தேசிய பாடசாலைகளில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு அதிகமாக தேசிய பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் ஆசியரியர்கள் 12000 பேர் காணப்படுவதாகவும் அவர்களில் 3ஆயிரம் பேருக்கு நாளைய தினம் இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Read more

bavan..0பொதுச் செயலாளர்,

இலங்கை ஆசிரியர் சங்கம்.

அன்புடையீர்,

கடந்த 06.10.2017 அன்று வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த, பாடசாலைகளுக்கிடையேயான சமச்சீரற்ற வளப்பங்கீடு சம்பந்தமான பிரேரணை மீதான விவாதத்தின் போது, நான் மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்திருந்த கருத்துக்களின் ஒரு பகுதி மட்டும் அரைகுறையாக,  எனது யோசனைகள்,  தீர்வு எனும் தலைப்பில்,  எனது எண்ணத்திற்கு முற்றிலும் பாதகமான முறையில் பத்திரிகை ஒன்றில் ஓரிரு தினங்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருப்பதையிட்டு எனது கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்ய முதலில் விரும்புகிறேன்.

குறிப்பிட்ட பத்திரிகை இவ்வாறான, உள் நோக்கத்துடனான செய்திகளை வெளியிட்டு வருவதில் எனக்கு ஆச்சரியமெதுவுமில்லை. Read more

Captureஅரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளார், சுதர்சன குணவர்தனவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ரங்க கலங்க சூரிய, பதவியை ராஜினாமா செய்தமையை தொடர்ந்து குறித்த பதவிக்கு வெற்றிடம் நிலவியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சுதர்சன குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more

salila munasingaலிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்குமாறு, அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது.

நிதி மோசடி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள அவருக்கு, குறித்த நிறுவனத்திலுள்ள அனைத்து அதிகாரங்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அந்த அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹேமக அமரசூரியவுக்கு அறிவித்துள்ளார். லிற்றோ கேஸ் நிறுவனம் அரசாங்க தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more

1901650438Airplaneகட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய விமானங்கள் இரண்டு மத்தல விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வந்த விமானங்களே இவ்வாறு மத்தலவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Captureddfஇலங்கை கணக்கியல் நிபுணர்கள் சங்க வருடாந்த மாநாடு-2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது தலைமையில் நேற்று பிற்பகல் பத்தரமுல்ல வோற்றஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

‘மாற்றமுறும் சவால்களை வெற்றிகொள்வதற்காக அர்ப்பணித்தல்’ எனும் தொனிப்பொருளிலான வருடாந்த மாநாடு 15 ஆவது தடவையாக நேற்று ஆரம்பமாகி இன்று நிறைவடைகிறது. இந்த மாநாட்டின் மூலம் காலத்துக்கேற்ற தொனிப்பொருளுடன், தெரிவுசெய்யப்பட்ட துறைசார் நிபுணர்களின் அறிவை பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. Read more

dfdfதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை வடமாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கதவடைப்பு போராட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, Read more