external affairs ministryஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உண்மைத்தன்மை, நீதி, இழப்பீடு ஆகியவற்றை ஊக்குவித்தல் மற்றும் மீள நிகழாமைக்கு உத்தரவாதமளித்தல் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளரின் பயணம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கங்கள், குறித்த விடயங்கள் தொடர்பில் அறிவுரைகளையும், கருத்துக்களையும் பெறுவதற்காக இத்தகைய விசேட அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தன.

எனினும், அவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடில்லை. அரசாங்கங்களுக்கு கிடைக்கக்கூடியதாகவுள்ள விசேட அறிக்கையாளர்களின் நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். நிறுவன ரீதியான திறனை கட்டியெழுப்பல், கொள்கை உருவாக்கம் முதலியனவற்றிற்கு நலன் வழங்கும் பாங்கொன்றில் அவர்களது ஆலோசனையும், நிபுணத்துவமும் தேவையென அரசாங்கம் கருதுமிடத்து அவற்றைப் பயன்படுத்தப்படலாம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.