Header image alt text

lllllllll (2)முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு கிராமத்தின் பொதுமக்களை வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் நேற்று சந்தித்திருந்தார்.

ஏற்கனவே கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மாகாண சபை உறுப்பினர் நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட உதவித் திட்டங்களுக்கான நன்றியினை தெரிவித்திருந்த மக்கள், தற்போதைய காலகட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அமைச்சர்முன் வைத்திருந்தனர். Read more

protestஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.பிரதான பஸ் தரிப்பிட வளாகத்தில் இன்றுகாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து கொண்டிருந்தன. Read more

lllllllll (1)வடக்கு மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம பிரிவில் அமைந்துள்ள கல்குவாரி கிராமத்தின் மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

பல்வேறு வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டும், வளங்கள் மிக்குறைவாக உள்ளதும், பிரச்சினைகள் ஏராளம் காணப்படுவதுமான இக்கிராமத்தின் பாழடைந்த பொது நோக்கு மண்டபத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. தொழிலின்மை, தோல்விகண்டுள்ள வாழ்வாதாரத் திட்டங்கள், கல்வி வளர்ச்சியின்மை அக்கிராமத்திற்கென்று ஒரு பொது அமைப்புக்கூட இல்லாத நிலைமை, Read more

fireவவுனியா, சாஸ்த்திரிகூழான்குளம், பாரதிதாசன் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வவுனியா – ஈச்சன்குளம் பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெறவிருந்த நிலையில் நேற்றுமாலை வகுப்பு இடம்பெற்ற தற்காலிக கட்டிடம் தீக்கிரையானது. தீப்பரவல் காரணமாக கட்டிடத்தில் இருந்த சில உடைமைகள் சேதமடைந்துள்ளன. சிலரின் தவறான செயற்பாடுகளால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Read more

digitel vehicle numbersவாகனங்களின் போக்குவரத்தினை அவதானிக்க, அதிநவீன தொழிநுட்பத்திலான இலக்கத்தகடு ஒன்றினை, அனைத்து வாகனங்களுக்கும் பொருத்தும் முறையினை அறிமுகம் செய்ய, மோட்டார் வாகனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த அதிநவீன தொழிநுட்பத்திலான இலக்கத்தகடு முறையை, அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாக, மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதனால், பல குற்றங்களை செய்துவிட்டு, தப்பிச் செல்லும் வாகனங்களை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என, அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

pistolநாட்டில் சுமார் 2 ஆயிரம் சட்டவிரோத துப்பாக்கிகள் காணப்படுவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இயங்கும் பாதாள குழுக்களிடமும் வேறு சில குழுவினரிடமும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட 700 துப்பாக்கிகள், அழிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

yarl deviகொழும்பு – காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இம் மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read more

rohitha bogollagamaஅதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

pobloஐ.நாவின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், 14 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு, நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டே, அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். அவர், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வார் என்று தெரியவருகின்றது. Read more

ranilபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பின்லாந்துக்கு செல்லவுள்ளார். தற்போது, ஜேர்மனுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அங்கிருந்து இன்று பிற்பகல் பின்லாந்து நோக்கிச் செல்லவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை வலுப்படுத்துவதும், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதுமே, இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதற்கமைய, பிரதமர் தனது இந்த விஜயத்தின் போது, அந்த நாட்டுப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். Read more