நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்து அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காமல் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிஷ லெனினிச கட்சியும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று முற்பகல் 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. Read more