Header image alt text

jacinda_ardern_next_magazine_1120x640நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37. நியூசிலாந்தில் கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நிலவி வந்தது.

இந்நிலையில், ”நியூசிலேன்ட் பெஸ்ட்” எனும் சிறிய கட்சியொன்று அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முன்வந்ததையடுத்து, தொழிலாளர் கட்சியின் ஜெசிந்தா அர்டென் பிரதமராகத் தெரிவாகியுள்ளார். அவர் கடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வந்தார். 1856ஆம் ஆண்டின் பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார் ஜெசிந்தா அர்டென் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

001வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக்கழகம் தனது 41வது ஆண்டின் நிறைவை முன்னிட்டும், தீபாவளி தினத்தை முன்னிட்டும் நடாத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (18.10.2017) காலை 9.30 மணிக்கு கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில், கோவில்குளம் ரொக்கெட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் திரு.வி.ஜோயல் நிரோஷன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஓய்வுபெற்ற அதிபர் திரு. வையாபுரிநாதன், கோமரசன்குளம் மகாவித்தியாலய அதிபர் திரு.வரதராஜா, Read more

wasimகொழும்பு முன்னாள் பிரதம நீதிமன்ற வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகரவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 8.30க்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டொக்ஸி இன்று உத்தரவு பிறப்பித்தார். Read more

fweவெலிமடை அம்பகஸ்தோவ நகரில் உடப்புஸ்ஸலாவை வெலிமடை பிரதான வீதியை மறித்து மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

ஊவா பரணகமை குமாரபட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள வல்கணடிய குளத்தின் எல்லையில் சுமார் 100 வருடங்களுக்கும் அதிக காலமாக வசித்து வரும் தம்மை பிரதேச செயலாளரின் தன்னிச்சையான தீர்மானத்தின்படி வெளியேற்ற முற்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more