Header image alt text

youth01ரஷ்யாவில் நடைபெறும் 19ஆவது உலக இளைஞர் விழாவில் புளொட் இளைஞரணி உப தலைவரும் , செயலாளரும் பங்கேற்பு.

19ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழா இவ்வருடம் ரஷ்யாவில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.ரஷ்யாவின் சொச்சி நகரத்தில் எதிர்வரும் 14/10/2017 தொடக்கம் 22/10/2017 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமகாலத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் கூடிய அரசியல் பணியில் தமது உறுப்பினர்களை உள்ளீர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தனது தூய அரசியல் நோக்கில் செயற்படுகின்றது. Read more

ஹர்த்தால் போராட்டத்திற்கு புளொட் அமைப்பு பூரண ஆதரவு!

free

 

 

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) பூரண ஆதரவு.
cropped-plote.jpgஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி,
PLOTE – DPLF
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

vietnam1_0வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த திங்கட்கிழமை (09) முதல் பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 பேரைக் காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. Read more

vikkiஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

hartalஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்றையதினம் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 அரசியல் கைதிகள், தங்களின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரங்களுக்கு மேலாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி, இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

sl refugees australiaஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் எதிர்வரும் வாரங்களில் அதிகளவிலான இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானஸ் தீவின் முகாமை, இந்த மாதத்துடன் மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஏதிலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மானஸ்தீவுகளில் இருந்தபடி அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களை நவுறு தீவிற்கு மாற்றுவதற்கான ஒழுங்குகள் இடம்பெறுகின்றன. Read more