மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கலந்துரையாடினார். நுன் கடன் திட்டம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நுன் கடனைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது. இதனையடுத்து கருத்துத் தெரிவித்த இந்திரஜித் குமாரசுவாமி,
பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வடக்கில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனைவரையும் எம்மால் சந்திக்க முடியாது. எனினும், பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் நலன் கருதி எம்மால் நிறைவேற்ற முடியுமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். Read more