Sirimevan-Ranasinghe-626x380புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனத்தினூடாக சிறிமெவன் ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் 21ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.  இதேவேளை முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவின் பதவிகாலத்தை நீடிப்பதற்கு, ஜனாதிபதி முடிவெடுக்காமையை அடுத்தே, புதிய தளபதி நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.