நுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுமாறு பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பே இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இரண்டு நாள் பயணமாக மத்திய வங்கியின் ஆளுநர் வட மாகாணத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் பிரதேச குடியில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுண் கடன் நிறுவனங்கள் பெண்களை இலக்கு வைத்து இலகுவான முறையில் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இதனால் பெண்கள் காலப்போக்கில் பாதிப்படைகின்றனர்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, நிதி நிறுவனங்களின் நுண் கடன், ஒரு கொள்ளை கடன். இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டார். இருக்கின்ற கடன் முறைகளை எவ்வாறு தடை செய்வது, அல்லது எவ்வாறு குறைப்பது என தாம் குடியில் அமைப்புகளின் பிரதிநிதகளிடம் இருந்து எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.