இந்த ஆண்டின் கடந்த 09 மாத காலப்பகுதியில் புகையிரதம் மற்றும் புகையிரத பாதைகளில் செல்பி எடுக்க முயற்சித்து 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
புகையிரதங்களினால் இடம்பெறுகின்ற விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், 2016ம் ஆண்டில், புகையிரத வீதிகளின் ஊடாக பயணிப்பதன் காரணமாக புகையிரதத்துடன் மோதி ஏற்பட்ட 436 விபத்துக்களில் 180 பேர் உயிரிழந்துள்ளதுடன், 256 பேர் காயமடைந்துள்ளதாக அந்த சபை கூறியுள்ளது. Read more