Header image alt text

arrest (2)சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பாலாவி பகுதியில் உள்ள விடுதியொன்றிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புதுகுடியிருப்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளத்திலுள்ள முகவர் ஒருவரிடம் பணம் செலுத்தி அவுஸ்திரேலியா செல்ல சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளனர். Read more

NIC-Smart-Sri-lnka-newsfirst-626x380உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, அதனை வழங்குவதற்கு விசேட பிரிவுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலின்போது தேசிய அடையாள அட்டை இல்லாமை காரணமாக 3 லட்சம் பேருக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க அண்மையில் தெரிவித்திருந்தார். தங்களது வசிப்பிடத்தை உறுதிப்படுத்த தேவையான உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லாதமை காரணமாக 3 லட்சம் பேர் வரை நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read more

sfdddfdபாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் முதுகு வளைவு நோயைத் தடுப்பதற்காக புதிய பாடசாலை புத்தகப் பை ஒன்றை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கொண்டு செல்லும் பைகளில் அதிகம் பாரம் காரணமாக அதிகமான மாணவர்களின் இந்த நோய் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைய இந்தப் புதிய பாடசாலை பைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். Read more

IMG_1176 - Copyமேல்மாகாண சபையினுடைய விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சரும், துணை முதல்வரும், மேல்மாகாண சபையின் அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர்,

மேல்மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளர் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வட மாகாணத்தின் விவசாயம், கால்நடை அபிவிருத்தி போன்ற விடயங்களை ஆராயும் முகமாக மூன்று நாள் விஜயமொன்றினை மேற்கொண்டு அங்கு வருகை தந்துள்ளனர். இவர்களை வரவேற்கும் நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன், Read more

IMG_1164 - Copyவட மாகாண மீன்பிடியை அபிவிருத்தி செய்யும் முகமாக வடமாகாண நிதியுதவியின் மூலம் முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் மீன்குஞ்சு விடும் நிகழ்வு நேற்றையதினம் (24.11.2017) இடம்பெற்றது.

நேற்று முற்பகல் 11.30அளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இதன்போது கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் அழகிய வீடு என்ற மீனவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மீனவ சமூகத்தைச் சேர்ந்த இருபது பேருக்கு தலா 50ஆயிரம் ரூபா காசோலை வழங்கப்பட்டதோடு, மீனவர்களுக்கான காப்புறுதியும் வழங்கப்பட்டது. Read more

IMG_1091 - Copyமுல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் யமஹா (YAMAHA) காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை (24.11.2017) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்களால் நேற்று முற்பகல் 10.30மணியளவில் மேற்படி காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யமஹா நிறுவன நிர்வாகிகள், முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி ஆணையாளர், பிரதேச பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

addsadsaஇலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்பத்திலான செயற்கைக்கோள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளதாக சீனாவின் சின்ஹ_வா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்பொருட்டு இலங்கை சார்பில் ஆதர்சி க்ளாக் மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேவையான தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பில் நிபுணர்களின் ஒத்துழைப்பை பெற்று கொள்ளும் பொருட்டு ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

dssயாழ். பருத்தித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தினால் மோதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை முதலாம் கட்டை பகுதியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவபாலன்( வயது 48) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேக்கரி உரிமையாளரான இவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் அவரது நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளார். அதன்போது ஏற்பட்ட தகராறின் பின்னர், அவர் அங்கிருந் சென்ற சமயம், அவரது எதிரியான உழவு இயந்திர சாரதி, உழவு இயந்திரத்தினால் மோதி கொலை செய்துள்ளார். Read more

zimbabwe-new-president-Lரொபர்ட் முகாபே பதவி விலயதை அடுத்து சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் மனங்காக்வா நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 37 வருடங்களாக ஆட்சியிலிருந்த ரொபர்ட் முகாபே அண்மையில் பதவி விலகியதை அடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த எமர்சன் பதவியேற்றார். Read more

egypt-blast-Lஎகிப்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 184 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

மேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 184 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. Read more