Header image alt text

எதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கான பாதுகாப்பு குறித்து முதல் கட்ட ஆலோசணை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவலாயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்திய – இலங்கை பக்தர்களின் மத நல்லிணக்க விழா பெப்ரவரியில் நடைபெற உள்ளதை தொடர்ந்து விழாவுக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் ஆவனங்கள் குறித்து நேற்று ராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசணை கூட்டம் ஒன்று நடைபெற்றது. Read more

உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் இதுவரை வாக்களிக்காதவர்களுக்கு மேலதிகமாக இரண்டு நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தபால் மூல வாக்குகளை பதிவுசெய்ய முடியுமென தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், உள்ளூர் அதிகாரசபை தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளுக்கான விநியோகிம் இன்றும் இடம்பெறுவதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். Read more

உள்ளுராட்சிமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 557 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இவற்றில் 94 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைகள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வன்முறைகளால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நேற்றைய தினம் சில தேர்தல் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கான 11ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.சி.முகுந்தனை ஆதரித்து திரு. மன்மதராஜா தலைமையில் கோப்பாய் கிழக்கு வளர்பிறை சனசமூக நிலைய மைதானத்தில் வியாழனன்று (25-01-2018) இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஏ.பரஞ்சோதி அவர்களும் கலந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக சிறப்புரையாற்றினார்கள். Read more

தென்மராட்சி பிரதேச சபையின் கொடிகாமம் நகர வேட்பாளர் திரு. சிவநேசனை ஆதரித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. கே.சயந்தன் தலைமையில் தவசிகுளத்தில் வியாழனன்று (25-01-2018) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில்

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த.சித்தார்த்தன், சி.சிறீதரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான என்.சிறீகாந்தா, வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் உரையாற்றினார்கள். Read more

எதிர்வரூம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில், திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து, 120 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை, குறித்த முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். Read more

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கான 11ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.சி.முகுந்தனையும் பட்டியல் வேட்பாளர் திருமதி. இந்திராணியையும் ஆதரித்து

வியாழனன்று (25-01-2018) கரந்தன் பாரதிதாசன் முன்பள்ளி முன்றலில் இடம்பெற்ற கிராம மக்களுக்கான தேர்தல் பரப்புரையின் போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஏ.பரஞ்சோதி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். Read more

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் குறித்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் திணைக்களம் தமக்கு அறிவித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். Read more

சார்க் நாடுகளின் 22ஆவது பொதுச்சபைக் கூட்டத்தை பாகிஸ்தானில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ளது. சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக் நேற்று இதனைத் தெரிவித்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இந்த பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆக்பானிஸ்தான் முதலான உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபைக்கான புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நியமனங்கள் தொடர்பில் வட மாகாண சபை செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, வட மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னல்ட் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சபாரத்தினம் குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read more